×

ஜொலிக்கப்போகும் மேம்பாலங்கள் வண்ண விளக்கு அமைக்க 33 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி திட்டம்

சென்னை : சென்னையில் 259 பாலங்கள், 16 சுரங்கப்பாதைகள், 5 சுரங்க நடைபாதைகள் ஆகியவற்றை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த ஆண்டு ரூ.13 கோடி மதிப்பீட்டில் 3 பெட்டக வடிவ பாலங்கள், ஒரு சிறு பாலம், ஒரு நடைபாலம் மற்றும் 22 இடங்களில் உள்ள பாலங்களை பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் ரூ.448 கோடி மதிப்பீட்டில் பல்ேவறு பாலங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 14 மேம்பாலங்களில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணி மற்றும் பாலங்களின் கீழ் பகுதியில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் வெர்டிகல் கார்டன் அமைக்கும் பணி மேற்கொள்ளபட உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் கோபதி நாராயணா சாலை மற்றும் திருமலை சாலை சந்திப்பில் செங்குத்து பூங்கா எனப்படும் வெர்டிகல் கார்டன் அமைக்கப்பட்டுள்ளது. இதைபோன்று சென்னையில் மீதம் உள்ள 14 மேம்பாலங்களில் காரன் ஸ்மித் சாலை சந்திப்பு, வெஸ்ட்காட் சாலை சந்திப்பு, தங்கசாலை சந்திப்பு, டவுட்டன் சாலை சந்திப்பு, பாந்தியன் சாலை - காசா மேஜர் சாலை சந்திப்பு, எஸ்பி சாலை சந்திப்பு, காந்தி மண்டபம் சாலை சந்திப்பு, பெரம்பூர் சாலை சந்திப்பு, மாகாலிங்கபுரம் சாலை சந்திப்பு, துரைசாமி சாலை சந்திப்பு, சிபி ராமசாமி சாலை சந்திப்பு, டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில்  வெர்டிகல் கார்டன் அமைக்கப்பட உள்ளது.

இங்குள்ள நீர் நிலைகளிலிருந்து கழிவுநீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு இந்த பூங்காவிற்கு பயன்படுத்தப்படும். இதற்காக மாநகராட்சியின் நிதியின் கீழ் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மேம்பாலங்களில் வண்ணத்தில் ஜொலிக்கும் வகையில் 14 மேம்பாலங்களின் இருபுறமும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : lighting bridges , Fires , shine,allocation , colored ,lighting
× RELATED ஜொலிக்கப்போகும் மேம்பாலங்கள் வண்ண...