×

வேளச்சேரி - பரங்கிமலை வழித்தட பறக்கும் ரயில் திட்டப்பணி 18 மாதத்தில் முடிக்கப்படும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி உறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி 14வது மண்டத்திற்கு உட்பட்ட  பொதுமக்களிடம் குறைகளை கேட்டறியும்  முகாம் உள்ளகரத்தில் உள்ள மண்டல அலுவல வளாகத்தில்  நேற்று நடந்த்து. சோழிங்கநல்லூர் எம்எல்ஏ  அரவிந்த் ரமேஷ் தலைமை வகித்தார். பெருங்குடி மண்டல உதவி கமிஷனர்  பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பொதுமக்கள் மற்றும் நலச்சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில், புழுதிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்க வேண்டும், மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நடைபாதை ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை சாலையில் திரியும் மாடுகளை அகற்ற வேண்டும்,  சாலை, குடிநீர், பாதாள சாக்கடை கோரி மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்று  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அவர்  உத்தரவிட்டார்.

அப்போது, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேசுகையில், ‘பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படம்.  எனது தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணி  18 மாதங்களில் முடிக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார். அதன்படி பணிகள் நடந்து கொண்டிருக்கிறது,’ என்றார்.முகாமில், திமுக பகுதிசெயலாளர் பெருங்குடி ரவிச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர். பாபு,  வட்ட செயலாளர்கள் சம்பத் திவாகர், செல்வம், ஜெய், சங்கர் மற்றும் துறைகளின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.



Tags : Velachery - Parangimalai , Velachery - Parangimalai, Flying ,Rail , completed, months
× RELATED ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் மேம்பாலம்...