×

பெண் ஊழியருடன் உறவு மெக்டொனால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிஸ்மிஸ்

லண்டன்: மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி  ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக் பெண் ஊழியருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.பிரபல உணவு நிறுவனம் மெக்டொனால்ட்ஸ். இதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக். இவர் நிறுவன பெண் ஊழியர் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மெக்டொனால்ட் நிறுவனம் அவர் மீது அதிரடி நடவடிக்ைக எடுத்து, ஸ்டீவ் ஈஸ்டரை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனால், நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் நிதி பரிமாற்ற நடவடிக்கையில் அவருக்கு தொடர்பும் இல்லை என மெக்டொனால்ட்ஸ்  நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்நிறுவனத்தின் அமெரிக்க கிளைகளுக்கு பொறுப்பாளராக இருப்பவர்.மெக்டொனால்ட் நிறுவனம் தன் மீது எடுத்துள்ள நடவடிக்கைக்கு உடன்படுவதாக ஸ்டீவ் ஈஸ்டர் தெரிவித்துள்ளார்.



Tags : CEO ,McDonald's , Relationship , female employee, Dismiss,CEO , McDonald's
× RELATED பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு...