×

பொருளாதார மந்தநிலையால் முக்கிய நகரங்களில் வீடு விற்பனை குறைவு

புதுடெல்லி: நாடு முழுவதும் முக்கிய 9 நகரங்களில் வீடு விற்பனை 9.5 சதவீதம் சரிந்துள்ளது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 25 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. பொருளாதார மந்த நிலையால் ரியல் எஸ்டேட் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய 9 நகரங்களில் வீடு விற்பனை நிலவரம் குறித்து தனியார் அமைப்பு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மேற்கண்ட முக்கிய நகரங்களில் புனே, குருக்கிராம் தவிர 7 நகரங்களில் வீடு விற்பனை சரிந்துள்ளது. மொத்தம் 52,855 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அதிகபட்சமாக 25 சதவீதம், மும்பையில் 22 சதவீதம், ஐதராபாத்தில் 16 சதவீதம், பெங்களூருவில் 9 சதவீதம் வீடு விற்பனை சரிந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.Tags : slowdown ,cities ,recession ,downturn , economic, downturn, Real estate ,sales , down
× RELATED ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில்...