×

கடந்த 5 ஆண்டுகளில் 3,400 வங்கி கிளை மூடல்

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் 3,400 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன என ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் எதிர்ப்பை மீறி பொதுத்துறை வங்கிகள் பல ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன. வங்கி இணைப்பால் மூடப்பட்ட கிளைகள் தொடர்பான விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சமீபத்தில் கோரப்பட்டன.

இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டில் 26 பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமான 3,400 கிளைகள் மூடப்பட்டுள்ளன அல்லது பெரிய வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. 2017-18 நிதியாண்டில் 2,083 கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2014-15ல் 90, 2015-16ல் 126, 2016-17ல் 253 கிளைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 2018-19ல் 875 கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 2,568 பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் மற்றும் மகிளா வங்கிகள் இணைக்கப்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : bank branch closures , 5 years, 3,400 bank ,closures
× RELATED ஏப்-24: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை