×

2014க்கு பிறகு வாங்கிய எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க வாய்ப்பு

புதுடெல்லி: 2 ஆண்டுக்கு மேல் காலாவதியான பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி வாய்ப்பு அளித்துள்ளது.இதன்படி, 2014ம் ஆண்டு ஜன. 1ம் தேதிக்கு பிறகு பாலிசி வாங்கிய பாலிசிதாரர்கள், காலாவதியான தங்கள் பாலிசியை புதுப்பித்துக் ெகாள்ளலாம். பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லாத பாலிசிக்களை 5 ஆண்டுகளுக்குள்ளும், யுலிப் பாலிசிக்களை 3 ஆண்டுகளுக்குள்ளும் புதுப்பித்துக்கொள்ளலாம் என எல்ஐசி தெரிவித்துள்ளது.

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (ஐஆர்டிஏ) விதிகளின்படி, பிரிமியம் கட்ட தவறி 2 ஆண்டுக்குள்தான் பாலிசியை புதுப்பிக்க முடியும். அதற்கு மேல் புதுப்பிக்க முடியாது. ஆனால், ஐஆர்டிஏ சிறப்பு அனுமதியுடன், 2 ஆண்டுக்குப் பிறகும் பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி சிறப்பு சலுகையை வழங்குகிறது. இந்த நல்ல வாய்ப்பை பாலிசிதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விபின் ஆனந்த் தெரிவித்துள்ளார்.



Tags : LIC , Purchased, LIC policy, renew
× RELATED கல்லுவிளை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு எல்ஐசி வாகனம்