×

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்

பாரிஸ்: ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவாக் ஜோகோவி சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் கனடாவில் டெனிஸ் ஷபோவலாவுடன் மோதிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் இது அவர் வென்ற 34வது பட்டமாகும். இந்த வரிசையில் ஸ்பெயினின் ரபேல் நடாலுக்கு (35 பட்டம்) அடுத்து 2வது இடத்தில் ஜோகோவிச் உள்ளார்.நடப்பு சீசன் முடிவு ஒற்றையர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க ரபேல் நடால் (9,585 புள்ளி), ஜோகோவிச் (8,945 புள்ளி) இடையே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.


Tags : Paris Masters Dennis Djokovic ,Paris Masters Tennis Djokovic , Paris Masters, Tennis, Djokovic , champion
× RELATED சாம்பியன் ஜுவென்டஸ் அதிர்ச்சி தோல்வி