×

மர்ம ஆசாமிகள் கைவரிசை கோவை உக்கடம் பெரியகுளம் தடுப்புச்சுவர் உடைப்பு

கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் உபரி நீர் வெளியேறும் தடுப்புச்சுவரை  மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களில் உக்கடம் பெரிய குளமும் ஒன்று. இந்த குளத்தில் 19.10 அடிக்கு நீரை தேக்கி வைக்க முடியும். பெரிய குளம் 372 ஏக்கர் அளவிற்கு நீர் தேக்க பரப்பு கொண்டது, இதன் மூலமாக 1,425 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த குளம் 14.74 அடி ஆழம் கொண்டது. இதில் 10 அடி ஆழம் வரை மட்டுமே நீர் தேக்க முடியும். அண்மையில் கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் காரணமாக உக்கடம் பெரியகுளம் முழுவதும் நிரம்பியது. இதனை அடுத்து பெரியகுளத்தின் தடுப்பணைகள் மூலம் தண்ணீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே மர்ம நபர்கள் சிலர் தடுப்பணையின் தடுப்புச்சுவரை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் உக்கடம் பெரியகுளத்தில் இருந்து தண்ணீர் பெருமளவில் வெளியேறியது.  இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மீனவர்களின் உதவியுடன் மணல் மூட்டைகளை அடுக்கியும், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மணலை கொட்டியும் தடுப்புச்சுவரை பலப்படுத்தினர். இதனால் தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மர்ம நபர்கள் சிலர் தடுப்பு சுவரை உடைத்து அதிலிருந்து வேகமாக வெளியேறும் தண்ணீரில் வரும் மீன்களை பிடிக்க திட்டமிட்டிருக்கலாம். உடனடியாக தடுப்புச்சுவர் சரிசெய்யப்பட்டு தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது’’என்றனர்.

Tags : Mystery Asami ,Handwriting Temple Ukkadam Periyakulam Block Break ,Mysterious Asami Break ,Coimbatore , Mysterious Asami, Break the wall ,Udayam Periyakulam in Coimbatore
× RELATED டாப்சிலிப்பில் கடும் வறட்சி, தீவனம்...