×

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பையடுத்து ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து தொடர்ந்து 3 நாட்களாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை அது 9,500 கனஅடியாக சற்று குறைந்தது. இருப்பினும், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,500 கனஅடியானது.

இதையடுத்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு, நேற்று காலை 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கிழக்கு -மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் 400 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags : Mettur Dam , Increased hydrology , Mettur Dam
× RELATED மேட்டுர் அணையின் நீர்வரத்து 7,013 கன அடியிலிருந்து 6,976 கன அடியாக குறைவு