×

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி மாநகராட்சி ஆணையர்கள் 4 பேர் மாற்றம் : அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. இதையொட்டி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி, வேலூர், ஆவடி மாநகராட்சி ஆணையர்களை அதிரடியாக மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:
மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு இணை இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
நீலகிரி நகராட்சி ஆணையர் பி.நாராயணன் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரியாகவும், ஓசூர் நகராட்சி ஆணையர் கே.பாலசுப்பிரமணியன் ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பி.விஜயலட்சுமி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு இணை இயக்குனராகவும், திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் ஆவடி மாநகராட்சி ஆணையராகவும்,வேலூர் மாநகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்பிரமணியன் திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.கிருஷ்ணமூர்த்தி வேலூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Elections ,Commissioners ,Govt ,Municipal Commissioners , Local Elections, 4 Municipal Commissioners Transferred,Govt
× RELATED பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு