×

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு எதிரொலி 5 மாநகராட்சிகளில் நிலைக்குழு அமைப்பு : நகராட்சி நிர்வாக துறை உத்தரவு

சென்னை : உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில் 5 மாநகராட்சிகளில் நிலைக்குழுக்களை அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன்படி டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் உள்ளாட்சி தேர்தல் நடத்து முடிந்து உறுப்பினர்கள் பதவியேற்ற பிறகு நிலைக்குழுக்கள் மற்றும் சட்டபூர்வ குழுக்களின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தும். இதற்கு முன்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் நிலைக்குழுக்களை உருவாக்க அமைக்க வேண்டும். இதன்படி 5 மாநகராட்சிகளில் நிலைக்குழுக்களை அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 5 மாநகராட்சிகளில் கணக்கு, கல்வி, சுகாதாரம், வரிவிதிப்பு, பணிகள், நகரமைப்பு உள்ளிட்ட 5 நிலைக்குழுக்கள் அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ஆவடி ஆணையருக்கு அதிகாரம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மாநகராட்சியில் வார்டு மறுவரையறை செய்து இட ஒதுக்கீட்டின்படி வார்டுகள் வெளியிடுவதற்கான அதிகாரத்தை ஆவடி மாநகராட்சி ஆணையருக்கு வழங்கி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Local Election Organization Echoing Standing Committee ,Department Directive. 5 Municipalities ,5 Municipalities: Municipal Administration ,Local Elections Organizing Echoing Standing Committee , Local Elections Organization,Standing Committee ,5 Municipalities
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...