×

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் : கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மேலிட பார்வையாளர்  கே.வி.தாமஸ் பங்கேற்றார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்ல பிரசாத், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எச்.வசந்தகுமார் எம்.பி., பொருளாளர் நாசே ராமச்சந்திரன், ஊடகதுறை தலைவர் கோபண்ணா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசின் பொருளாதார மந்த நிலையை கண்டிக்கும் வகையில் நவம்பர் 5ம் தேதி (இன்று) முதல் வருகிற 15ம் தேதி வரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட மக்கள் பிரசாரம் நடைபெற உள்ளது. ஒரு தலைவர் குறைந்தபட்சம் 5 இடங்களில் நடக்கும்.

Tags : protests ,Congress ,government ,Tamil Nadu ,KS Alagiri , Congress protests , Tamil Nadu condemning ,central government's economic policy
× RELATED உதயநிதி கைது கண்டித்து தி.மு.க.வினர் மறியல்