×

சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோ: கோவை மாநகராட்சியில் அறிமுகம்

கோவை: கோவையில் முதன்முதலாக பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்ற ரோபோ இயந்திர செயல்பாடு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு மண்டலம், சலீவன் வீதி, மாநகராட்சி மாரண்ண கவுடர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடந்தது. உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முகாமில், மனிதக்கழிவுகளை மனிதர்களை கொண்டு அகற்றுவதற்கு மாற்றாக கோவை மாநகராட்சியில் முதன்முதலாக பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றும் ரோபோ இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. எச்.பி.சி.எல் நிறுவனம் ரூ.36 லட்சம் மதிப்பிலான ரோபோ இயந்திரத்தை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது. இதன் செயல்பாட்டினை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் அமைச்சர் எஸ்பி வேலுமணி பார்வையிட்டு துவக்கி வைத்தார். மேலும் 5 மண்டலங்களுக்கு கொசு ஒழிப்பான் இயந்திரங்களின் பணியையும் துவக்கி வைத்தார்.


Tags : Introduction ,Coimbatore Corporation Introduction ,corporation ,Coimbatore , Introduction , sewage, disposal, robot, Coimbatore corporation
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...