×

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க 689 அலுவலர்கள் அடங்கிய 151 குழுக்கள்: அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர்: வடகிழக்கு பருவமழையை சமாளிக்க 689 அலுவலர்கள் அடங்கிய 151 குழுக்கள் பணியில் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை -2019 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமை வகித்தார். கலெக்டர் ஆனந்த், நாகை எம்பி எம்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பின் அமைச்சர் காமராஜ் கூறுகையில், திருவாரூர் மாவட்டத் தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு 20 அலுவலர்கள் அடங்கிய 10 மண்டல அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் குழுக்களும், 8 அலுவலர்கள் அடங்கிய துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள் குழுக்களும், வட்டார வாரியாக115 அலுவலர்கள் அடங்கிய 10 வெள்ளத் தடுப்புக் குழுக்களும், சரக அளவில் வெள்ள நிவாரணப் பணிகள் செயல்படுத்த 88 அலுவலர்கள் அடங்கிய 29 குழுக்களும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 48 அலுவலர்கள் அடங்கிய 12 மருத்துவ குழுக்களும் தெரிவித்தார்.

அரசு மருத்துமனைகளில் 32 அலுவலர்கள் அடங்கிய 8 மருத்துவ குழுக்களும், கால்நடை பராமரிப்புத்துறையில் 10 அலுவலர்கள் அடங்கிய 10 கண்காணிப்பு குழுக்களும், கால்நடை மருத்துவமனைகளில் 103 அலுவலர்கள் அடங்கிய 52 கால்நடை மருத்துவ குழுக்களும், 5 அலுவலர்கள் அடங்கிய 1 போக்குவரத்து அலுவலர்கள் குழுவும்,5 அலுவலர்கள் அடங்கிய 1 செய்தி வெளியீட்டு குழுவும், 22 அலுவலர்கள் அடங்கிய 1 ஆலோசனைக் குழுவும், 5 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 5 உணவு பாதுகாப்புக் குழுவும், 51 அலுவலர்கள் கொண்ட 11 தகவல் அளிக்கும் குழுவும், ஆக மொத்தம் 689 அலுவலர்கள் அடங்கிய 151 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்களின் அவசர உதவிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மை அலுவலகத்தில் உள்ள 04366- 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், இம்மாவட்டத்தில் 32 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் உள்ளது.இதில் 1309 பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றை மழைநீர் சேகரிப்பானாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் மூலம் ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

Tags : committees ,Minister ,Kamaraj ,North East Monsoon , 689 Officers, 151 Committees, Minister Kamaraj, Information
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா