×

சென்னையின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறப்பு

திருவள்ளூர்: சென்னையின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள சோழவரம் ஏரியானது  ஒரு மழைநீர்பிடிப்பு தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கதிலிருந்து அண்மையிலுள்ள சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த ஏரி சென்னையில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். சோழவரம் ஏரியின் ஒட்டுமொத்த கொள்ளளவு என்பது 1081 மி. கனஅடி. தற்போது 233 மி. கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் 185 கனஅடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தற்போது சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் மொத்தம் 9 மதகுகள் இருக்கிறது. இந்த 9 மதகுகளில் முதலாவதாக 4 மதகுகளில் தண்ணீரானது தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் சோழவரத்தில் இருந்து புழலுக்கு செல்லக்கூடிய இணைப்பு கால்வாய் வழியாக 100 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

புழல் ஏரியின் ஒட்டுமொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மி. கனஅடியில் தற்போது இந்த தண்ணீரானது சேர்ந்து அங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படும். தற்போது பெய்துள்ள மழையில் 80 மி.லிட்டர் தண்ணீரானது சேமிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று தொடர்ச்சியாக தூர்வாரினால் 1081 மி. கனஅடியை தாண்டியும் இந்த தண்ணீரானது முழுமையாக சேமிக்க முடியும் என்பது பொதுப்பணித்துறையின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த தண்ணீரானது திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மழைநீர் வரத்து அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் இந்த தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : lake ,Cholavaram ,Chennai Open , Chennai, Drinking water, Cholavaram Lake, 100 cubic feet of water, opening
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு