×

மணல்மேடு செட்டிக்கட்டளை கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்

மயிலாடுதுறை: மணல்மேடு செட்டிக்கட்டளை கிராமத்தில் சேதமடைந்த சாலையால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி ஊராட்சி செட்டிக்கட்டளை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஓடக்கரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்ல ஓடக்கரை பாதை என்கிற ஒருவழி மட்டுமே உள்ளது. 2 கி.மீ. தொலைவுள்ள இந்த பாதையில் சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு சாலை போடப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பாதையில்; சுமார் அரை கி.மீ தொலைவுக்கு கடந்த ஒருவாரமாக பெய்துவரும் மழையால் சேறும் சகதியுமாக உள்ளது. பள்ளி குழந்தைகள் கடந்த ஒரு வாரமாக சேற்றில் நடந்தே பள்ளிக்கு செல்லும் அவலம் நீடித்து வருகிறது. இதனால், மாணவர்கள் சீருடையில் சேற்றுடன் பள்ளிக்கு செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை மயிலாடுறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்பிரச்னையில் நாகை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை துரிதப்படுத்தி சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும் என்பது இங்கு உள்ள மக்களின் கோரிக்கையாகும். கிராமப் பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் என்பதே கனவாகி உள்ள நிலையில் சாலை சரி இல்லாமல் பள்ளி மாணவர்கள் படும் பாடு பெற்றோரைக் கண்கலங்க வைக்கிறது.

Tags : road ,sandalwood village , Students, road
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை