×

ஒடுகத்தூர் அருகே 14 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

அணைக்கட்டு: ஒடுகத்தூர் அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குர்ரப்பன், விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடலை பயிரிட்டிருந்தார்.  இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை நிலத்தில் மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து குறித்து ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வனவர் பிரதீப்குமார், வனகாப்பாளர் முனிசாமி மற்றும் வனதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலத்தில் இருந்த சுமார் 14 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்து பருவமலை காப்பு காட்டில் விட்டனர்.
பேரணாம்பட்டு: இதேபோல், பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பள்ளிஏரிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் கேசவன் (45), இவரது நிலம் ஏரிக்கொல்லை கிராமத்தில் குண்டலப்பல்லி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலையை அறுவடை செய்யும் பணியில் கூலி ஆட்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, செடிகளின் அடியில் 6 அடி நீள மலைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. உடனே பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனவர் ஹரி, வனகாப்பாளர்கள் தர், மரகதம் ஆகியோர் வந்து மலைப்பாம்பை மீட்டு பல்லலகுப்பம் விடிவு காப்புகாட்டில் விட்டனர்.

Tags : Odukathoor ,Python , Python
× RELATED உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை...