×

ஆரல்வாய்மொழி அருகே மண்ணில் புதைந்த புதிய நான்கு வழிச்சாலை

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி அருகே புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதி 3 அடிக்கு மேல் இருப்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  காவல்கிணறில் இருந்து நாகர்கோவிலுக்கு நான்கு வழி சாலை பணி நடைபெற்று  வருகின்றது. இந்நிலையில் காவல்கிணறில் இருந்து மைலாடி விலக்கு வரை  சாலை  பணி முற்றிலும் முடிவடைந்து இச்சாலை வழியாக கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா  வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த சாலையில் அடிக்கடி  மண் இருப்பு இருந்து சாலையில் சுமார் 2 அடியில் இருந்து 3 அடி வரை  பள்ளம் ஏற்படுகிறது. கடந்த 5 மாதத்திற்கு முன்பு கண்ணுபொத்தை  அருகே போடப்பட்ட சாலையில் முன்பு கிணறு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதனை முறையாக மூடாமல்  வெறும் மண்ணை கொண்டு மூடி அதற்கு மேல் சாலை போட்டதால் அப்பகுதியில் சுமார் 3 அடி  ஆழத்திற்கு சாலை புதைந்தது.

இது குறித்த தகவல் அறிந்ததும் அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதனை சரி செய்தனர். அதே போன்று  இப்பகுதியில் வருகின்ற 3 கண் ஓடை அருகேயும் புதிதாக போடப்பட்ட சாலை இருப்பு  இருந்தது குறிப்பிடதக்கது.
தற்போது காவல்கிணறில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த நான்கு வழிச்சாலை தொடங்குகின்ற  பகுதியில் சுமார் 5 மீட்டர் தூரம் சாலையானது புதைந்தது. இந்த பகுதியில் காங்கிரீட் ரோடானது சுமார் 3 அடி  ஆழத்திற்கு மேல் இருப்பு இருந்துள்ளது. இதனால் இவ்வழியாக வருகின்ற வாகன ஓட்டிகள்  மிகவும் அச்சமடைந்துள்ளனர். மேலும் 4 வழிச்சாலை புதைந்த பகுதியில் முன்பு கிணறு  இருந்ததாகவும் அதனை சரியாக மூடாமல் மேல் பகுதியில் காங்கிரீட் ரோடு  போட்டதால் தற்போது கனமழை காரணமாக  சாலையின் அடிப்பகுதி இருப்பு இருந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக இந்த சாலை ஆங்காங்கே புதைந்து வருவது இச்சாலையில் பெரிய  விபத்தினை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்து இது மாதிரியான சம்பவம் நடைபெறாமல் இருக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,


Tags : road ,soil ,auroral ,Aralvaymoli , Aralvaymoli
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...