×

அண்ணா பல்கலை-க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும் 69% இடஒதுக்கீடு தொடரும்: மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை சார்பில் கடிதம்

டெல்லி: அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு உயர்த்தும் வகையில் இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ் எனப்படும் சிறப்பு அந்தஸ்தை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மும்பை ஐ.ஐ.டி, சென்னை ஐ.ஐ.டி.,  அண்ணா பல்கலை கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிலையில் அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் அங்கு பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீடு 49.5 சதவிகிதமாக குறைக்கப்படும் என கூறப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை சார்பில் கடிதமும் எழுதப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும்  இட ஒதுக்கீடு முறை உட்பட அம்சங்களுக்கு  பாதிப்பு ஏற்படாத வகையில் அண்ணா பல்கலை கழகத்தில் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலை கழகத்தில் சீர்மிகு பல்கலை கழக அந்தஸ்து வழங்கப்பட்டாலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்காது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.


Tags : Anna University ,Center , Anna University, special status, 69% reservation, will continue, the central government confirmed
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!