திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர்.

பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் அதிகரித்து வருகிறது.
 இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் 2ம் பிரகாரத்தில்  பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். தீபம் ஏற்றி வழிபட்டனர். வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கார், வேன், பஸ்களில் அண்ணாமலையாரை தரிசிக்க வந்திருந்தனர்.

Tags : Devotees ,Thiruvannamalai Annamaliyar Temple Thiruvannamalai , Thiruvannamalai
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்