×

மாஞ்சாநூல் அறுத்து குழந்தை பலியான சம்பவம்: 15 வயது சிறுவன் மற்றும் நாகராஜ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை பலியான சம்பவத்தில் பட்டம் விட்ட கொருக்குப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 15 வயது சிறுவனையும் காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று மாலை சென்னை ஒண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் அவரது மனைவி மற்றும் 3 வயது மகன் அபினையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்தார். மீனாம்பாள் நகர் பகுதியில் அவர்களது இரு சக்கர வாகனம் சென்று கொண்டிருந்தபோது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தை மிகவும் ஆழமாக அறுத்தது. இதில் சிறுவன் அபினையு துடிதுடித்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று வடசென்னை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, காசி மேடு, ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். காத்தாடிகள் எங்கே விற்கப்படுகிறது, மாஞ்சா நூல் தயாரிக்கப்படும் இடங்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். ஆன்லைன் மூலம் மாஞ்சா நூல் விற்கப்படுவதை எப்படி தடுப்பது குறித்தும் ஆய்வு நடத்தி வந்தனர். இந்த நிலையில், காசி மேடு ஏ.ஜெ காலனியை சேர்ந்த டார்லஸ் என்பவர் காத்தாடி விற்பனை செய்வதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த நபரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20க்கும் மேற்பட்ட காற்றாடி மற்றும் மாஞ்சா நூல்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று அந்த சம்பவம் நடந்த கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் பகுதியில் காற்றாடி விடுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு போலீசார் சென்றனர். அங்கு, 15 வயது சிறுவன் உட்பட 20 வயதுப்பி நிரம்பிய நாகராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சமத்துவம் குறித்து அனைத்து காவல் நிலையங்களிலும் தகவல் அளிக்கப்பட்டு காத்தாடி விடுபவர்கள் விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : arrest ,Nagaraj ,incident ,Mancanul , Manja Noel, boy killed, 2 others arrested, police are investigating
× RELATED சூதாடிய 3 பேர் கைது