×

ஆராய்ச்சியாளர்களுக்காக சர்வதேச விண்வெளி மையதிற்கு அதிநவீன சமையல் சாதனம் இன்று சென்றடைகிறது

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களுக்கு அனுப்பப்பட்ட அதிநவீன சமையல் சாதனம் இன்று அவர்களை சென்றடைகிறது. விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான அதிநவீன சமையல் சாதனத்தை சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி மையம், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து வான்வெளி ஆராச்சிக்காக விண்வெளியில் அமைக்கும் ஒரு இடம். தற்போது, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணியை கவனிக்கின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை தயாரிக்க மாவு, மைக்ரோவேவ் அவன் ஆகியவை அமெரிக்காவின் வெர்ஜீனியா வாலப்ஸ் தீவிலிருந்து 3.7 டன் எடைகொண்ட சைக்னஸ் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. சைக்னஸ் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ள வீரர்கள் முதன்முதலாக அங்கு ‘மைக்ரோவேவ் அவன்’ பயன்படுத்தி பிஸ்கெட், சாக்லேட் போன்ற உணவுப்பொருட்களை தயாரித்து சுவைக்கப்போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அதிகபட்ச வெப்பம், ஈர்ப்புப்பசை இல்லாத நிலை, ஆகிய சூழல்களில் பிஸ்கட் சுடும் போது அதன் வடிவம், அமைப்பு ஆகியவை எப்படி இருக்கும் என விஞ்ஞானிகள் ஆராய இருக்கிறார்கள். மேலும் கதிரிழக்கத்திற்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் உடை மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் உதிரி பாகங்கள் உள்ளிட்டவையும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் காரில் பயன்படுத்தக்கூடிய கார்பன் இழைகள், விண்வெளியில் எத்தகைய தாக்கத்துக்கு ஆளாகிறது என்று ஆராயப்படும். அத்துடன் அந்த விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான கருவிகள் சிலவும் அனுப்பப்பட்டுள்ளன.


Tags : International Space Station ,researchers ,investigators , Researcher, Space Center, Culinary Device, Reach Today
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...