×

வேலூர் சிறையில் முருகன் - நளினி தொடர் உண்ணாவிரதம்: முருகன் 17-வது நாளாகவும், நளினி 10-வது நாளாகவும் போராட்டம்

வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நளினி மற்றும் முருகனின் உடல்நிலை நலிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நளினி 10 நாட்களும், முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு சிறை மருத்துவ மனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 18ம்தேதி சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்து, அவரை தனிச்சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே இவர்கள் இருவரும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முருகன் இன்று 17-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். இவரை சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்வதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும், அவரது உயிரை காப்பாற்றவேண்டும் என கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு ஆதரவாக அவரது மனைவி நளினியும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். என் கணவருக்கு சிறையில் ஏற்படக்கூடிய கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், அவருக்கு வழக்கம் போல அனைத்து சலுகைகளும் அளித்து சிறையில் இருக்க உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நளினி இன்று 10-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இருவரில் உடலில் நீர்சத்து குறைந்து இவர்களின் உடல்நிலை தற்போது மோசமைடைந்துள்ளது. முருகனுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குளுக்கோஸ் ஏற்பட்டு வருகிறது. இதேநிலை நளினிக்கும் காணப்படுவதால் அவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Murugan - Nalini ,jail ,Vellore ,Murugan ,Nalini , Vellore Prison, Murugan - Nalini, serial fasting
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்