×

தொடர்ந்து 5-வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல் விலை; வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல் விலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 9பைசா குறைந்துள்ளது. அதன் அடிப்படையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.50 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.50 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையில் தொடர் விலை ஏற்றத்தை கண்டது. தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. ரூ.86-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை படிப்படியாக குறைந்தது.

அதன் அடிப்படையில் தொடர்ந்து 5-வது நாளாக விலை குறைந்து, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.59-க்கும், டீசல் 2 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.69.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Motorists , Gasoline prices, motorists, happiness
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...