×

திருச்சி ஏர்போர்ட்டில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்

திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு நேற்றுமுன்தினம் ஏர்ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது  உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த ஜெசிமா(36) விடம் ₹29.63 லட்சம் மதிப்புள்ள 766 கிராம், பிரவின்பானு (45) என்பவரிடம் இருந்து ₹29.32லட்சம் மதிப்புள்ள 758 கிராம், அசன்முகமது(34) என்பரிடம் ₹19.30லட்சம்  மதிப்புள்ள 499 கிராம் தங்கம் என மொத்தம் 2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.Tags : Trichy airport , At Trichy, Airport, Gold seized,
× RELATED வடிவம் மாற்றி கடத்தப்படும் தங்கம்: ‘பையர்கள்’ தப்புவது எப்படி?