×

ராகுல் தோல்வி பற்றி நையாண்டி தொடர்: இணையத்தில் விரைவில் வெளியீடு

புதுடெல்லி:பங்கஜ் சங்கர் என்ற முன்னாள் பத்திரிக்கையாளர், காங்கிரஸ் மற்றும் சோனியா குடும்பத்தினருடன் பல ஆண்டு காலம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் இவர் பிரியங்காவின் ஊடக  செயல்பாடுகள், அவரது நிகழ்ச்சிகள் பற்றிய வாட்ஸ் அப் குரூப்பையும் இயங்கியதாக தெரிவித்துள்ளார். அவர் காங்கிரசின் உண்மை நிலவரத்தை தெரியப்படுத்தும் வகையில் நையாண்டி தொடர் ஒன்றை தயாரித்து, அதை பிரபல இணையதளத்தில் தொடராக வெளியிடப் போவதாக கூறியுள்ளார்.

இது குறித்து பங்கஜ் சங்கர் கூறுகையில், ‘‘பிரியங்கா காந்தியால் மட்டுமே காங்கிரசை மீட்டு கொண்டு வர முடியும். ஆனால், இதற்கு சோனியாவின் மகன் பாசம் தடையாக இருக்கிறது. உண்மை நிலவரத்தை காங்கிரஸ் தலைமைக்கு  தெரியப்படுத்துவதற்காகத்தான் இந்த தொடரை எடுக்கிறேன்.  தற்போது 13வது தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. பாஜ.வை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சி தேவை. அது, பிரியங்காவால் மட்டுமே முடியும் என காங்கிரசில் உள்ள  ஒவ்வொருவரும் நம்புகின்றனர். ’ என்றார்.இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் கூறுகையில், ‘‘சோனியா குடும்பத்தினரிடம் பங்கஜ் சங்கர் பணியாற்றவே இல்லை. செய்தியில் இடம்பெறுவதற்காக அவர் ஏதோ கூறுவது போல் தெரிகிறது. அல்லது இவருக்கு பாஜ  அரசும் உடந்தையாக இருக்கலாம்,’’ என்றார்.   


Tags : Rahul , Rahul debacle, Release , internet
× RELATED தருண் கோகாய் எனது குருநாதர்: ராகுல் காந்தி உருக்கம்