×

அதிமுக கூட்டணியில் நீடிப்பா?: சரத்குமார் பேட்டி

வேலூர்: வேலூரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 10ம் தேதி கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் நீடித்து வருகிறோம். தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பேசி முடிவெடுக்கப்படும். . அரசு மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலான அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்துள்ளனர் எனவே நாங்கள் கிளினிக் நடத்த மாட்டோம் என்று அரசிடம் உத்தரவாதம்  அளித்துவிட்டு, போராடினால் நானும் அவர்களுக்காகப் போராட தயார்.இவ்வாறு கூறினார்.



Tags : alliance ,AIADMK ,Sarathkumar , AIADMK alliance?, Sarathkumar
× RELATED `பணத்தை நம்பல, ஜனத்தை நம்புறேன்’...