×

சாக்கடை, மனிதக்கழிவு அகற்ற ரோபோ

கோவை:  கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ராசாமணி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், மனிதக்கழிவுகளை அகற்றுவதற்கு முதன்முதலாக  பாதாள ரோபோ இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. எச்.பி.சி.எல் நிறுவனம் ரூ.36 லட்சம் மதிப்பிலான ரோபோட் இயந்திரத்தை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது. இதன் செயல்பாட்டை ஆர்.எஸ்.புரத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி  வைத்தார். மேலும் 5 மண்டலங்களுக்கு கொசு ஒழிப்பான் இயந்திரங்களின் பணியையும் அமைச்சர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.


Tags : Sewer, human waste, disposal ,robot
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...