×

லஷ்கர், ஜெய்ஸ் அமைப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: அமெரிக்க அரசு அறிக்கை

புதுடெல்லி: தீவிரவாதம் நிலவரம் பற்றிய அறிக்கை ஒன்றை ‘தீவிரவாதம்-2018’ என்ற தலைப்பில் அமெரிக்க அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு தவறிவிட்டது. நிதி குழு நடவடிக்கை, ஐ.நா தடை ஆகியவை அமல்படுத்தப்படாததால், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து நிதி திரட்டுகின்றன. ஆப்கன்  அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு ஏற்பட பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தாலும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் மற்றும் ஹக்கானி  அமைப்பு தீவிரவாதிகளுக்கு கட்டுப்பாடு  விதிக்கவில்ைல. தீவிரவாத எதிர்ப்பு சட்டப்படி, தீவிரவாத அமைப்புக்கு பணம் கொடுப்பதை குற்றமாக பாகிஸ்தான் அறிவித்தது. ஆனால், முறையாக அமல்படுத்தவில்லை. ஆனால், உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் தீவிரவாத அமைப்புகள்   பணபரிமாற்றம் செய்வது தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Lashkar ,India ,Jais Organization ,Government ,US , Lashkar, Jais, Threat , India
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்