சிக்கிம் மக்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

காங்டாக்:  சிக்கிம் பல்கலைக் கழகத்தின் 5வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 11 மாணவர்களுக்கு தங்க பதக்கம், சான்றிதழ்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சிக்கிம் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியை வழங்குகிறது. அழியும் நிலையில் உள்ள லிம்பு, லெப்சா, புட்டியா உட்பட பல மொழிகளுக்கு இந்த பல்கலைக் கழகம் தனி மையம் ஏற்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.சிக்கிம் மாநிலத்தில் அனைத்து மத மக்களும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர். ஒரு மதத்தினர், மற்றவர்களின் விழாக்களில் உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>