×

கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சோகம் தந்தையுடன் வந்த 3 வயது குழந்தை உயிரை பறித்த மாஞ்சா நூல்: பெற்றோர் கண்முன்னே நடந்த கொடூரம்

சென்னை: கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் பைக்கில் உட்கார்ந்து வந்த சிறுவனின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்து ரத்தம் கொட்டியது. அவனை மருத்துவமனைக்கு தூக்கி ெசன்ற நிலையில் பரிதாபமாக இறந்தான். தங்கள் கண்முன்னே  குழந்தை இறந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்களை பரிதாபமடைய செய்தது.சென்னை காவல் துறையால் காற்றாடிவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் வட சென்னையில்தான் அதிகளவில் காற்றாடி விற்பனையும், பறக்கவிடும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர்  மாஞ்சா நூல் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் உடைந்த கண்ணாடி உள்பட பல்ேவறு அபாயகரமான பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூல் தயாரிப்பு முற்றிலும் முடங்கி போனது.எனினும் ஆன் லைன் என்ற அரக்கன் வழியில் மீண்டும் சென்னையில் காற்றாடி, மாஞ்சா நூல் விற்பனை தற்போது கொடி கட்டி பறக்கிறது. மொத்தமாக ஆன்லைனில் இவற்றை வாங்கி சில்லறை விைலயில் தெரிந்தவர்களுக்கு மட்டுமே  இந்த காற்றாடிகள் விற்றனர். இது குறித்து ‘சென்னையில் அதிகரித்து வரும் காற்றாடி கலாச்சாரம் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற தலைப்பில் கடந்த மாதம் 15ஆம் தேதி தினகரன் நாளிதழில் ெசய்தி  வெளியானது. அதில், ஆன்லைனில் விற்கப்படும் மாஞ்சா நூல்களால் உயிர் இழப்புகள் ஏற்படும்.

எனவே ஆன்லைனில் விற்கப்படும் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகள் தடை செய்ய வேண்டும் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை காற்றாடி விற்கப்படும் ஒரு ஆன்லைன் இணையதளம் கூட காவல்துறையினரால்  முடக்கப்படவில்லை.
இந்நிலையில் கொண்டித்தோப்பு கிருஷ்ணப்ப தெருவை சேர்ந்தவர் கோபால் (35), மண்ணடியில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.இவரது  மனைவி சுமித்ரா (28). இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு  அபினேஷ் ராவ்  (3) என்ற குழந்தை உள்ளது.   நேற்று மாலை கொருக்குப்பேட்டை அண்ணாநகர் உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் பைக்கில் சென்றனர். பைக்கை கோபால் ஓட்ட பெட்ரோல் டேங்க் மீது குழந்தை உட்கார்ந்து இருந்தான்.  கணவருக்கு பின்புறம் அவரது மனைவி சுமித்ரா இருந்தார். இந்நிலையில் பைக் கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலத்தில் வரும்போது காற்றாடியின் மாஞ்சா நூல் பைக் முன்புறம் அமர்ந்திருந்த குழந்தையின் கழுத்தில் மாட்டி அறுத்தது.  இதில் குழந்தையின் கழுத்து நரம்புகள் அறுந்து ரத்தம் கொட்டியது. வலி பொறுக்க முடியாமல் குழந்தை துடித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத கோபால் உடனடியாக வண்டியை நிறுத்தி மாஞ்சா நூலை அகற்றி உடனடியாக குழந்ையை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் பார்த்தபோது வரும் வழியிலேயே குழந்தை இறந்தது தெரியவந்தது. இந்த தகவலை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர் இதை பார்த்து மருத்துவமனையில்  இருந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

  இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது மாஞ்சா நூல் வைத்தே காற்றாடி விடுவதால் பல உயிரிழப்பு ஏற்பட்ட  காரணமாக தடைசெய்யப்பட்டது. அதையும் மீறி தற்போது வடசென்னை பகுதியில் காத்தாடி விடும்  கலாச்சாரம் மீண்டும்  தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே போல் வியாசர்பாடியை  சேர்ந்த ஒரு வாலிபர் பைக்கில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் செல்லும்போது மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்தது. இதுபோல்  சம்பவங்கள் அடிக்கடி  நடைபெறுவதால் இதற்கு காவல்துறை தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.

வேறு யாருக்கும் என் நிலை வரக்கூடாதுதந்தை கோபால் பேட்டி நான் கூலிவேலை செய்கிறேன். விடுமுறை என்பதால் உறவினர் வீட்டுக்கு வந்தோம். நாங்கள் பைக்கில் வரும்போது முன்னாள் உட்கார்ந்து இருந்த என் ஒரே மகனின் கழுத்தை எங்கிருந்தோ வந்த மாஞ்சாள் நூல் அறுத்தது. என் மகனை பலி  வாங்கிவிட்டது. நாங்கள் உயிர் வாழ்ந்ததே குழந்தைக்காக தான். அவன் இறந்துவிட்டான் என்ற தகவலை டாக்டர் சொன்னவுடன் எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. என் மகனுக்கு ஏற்பட்ட நிலை வேறு குழந்தைக்கும்,  பெற்றோருக்கும் ஏற்படக் கூடாது என்று கண்ணீர் மல்க கூறினார். கைது நடவடிக்கையால் உடைந்த கண்ணாடி உள்பட பல்ேவறு அபாயகரமான பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூல் தயாரிப்பு முற்றிலும் முடங்கி போனது.

Tags : tragedy ,bridge ,parents ,Karukkupettai , Korukkupettai ,bridge,father, Parents
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...