×

ரஜினிக்கு வைகோ வாழ்த்து

சென்னை: மத்திய அரசின் விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “கலையுலகம் கொண்டாடும் பொன்விழா கதாநாயகனான உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்   விருதுக் பெறும் முழு தகுதியும் உண்டு. விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும்” என்று வாழ்த்துகின்றேன்” என்றார். வைகோ இதற்கு ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்துக்  கொண்டார்.இதே போல் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் வெளியிட்ட அறிக்கையில், “35 ஆண்டுகாலம் நல்ல நண்பராக, எல்லா காலகட்டத்திலும் எங்கள் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்ட குடும்ப நண்பர் ரஜினிக்கு தகுந்த நேரத்தில்  இந்த விருது அளிக்கப்பட்டது மிகுந்த மனநிறைவை தருகிறது. என் நண்பருக்கு கிடைத்த விருதுக்கு நண்பனாய் நின்று வாழ்த்துவது நட்பின் பெருமை” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Vaiko ,Rajini ,Rajini Congratulations Vaiko , Rajini, Congratulations, Vaiko
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...