×

மூதாட்டியிடம் நகை பறிப்பு

அண்ணாநகர்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன் (63). இவரது மனைவி முனியம்மாள் (60). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். அங்கிருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக நேற்று கோயம்பேடு பஸ் நிலையம் வந்தனர். அங்கு, இவர்களை நோட்டமிட்ட 3 பேர், பென்ஷன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, முனியம்மாளின் 3 சவரன் செயினை அபேஸ் செய்து கொண்டு தப்பினர். புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : grandfather , Grandparents, jewelery
× RELATED விடுமுறையில் வீட்டுக்கு வந்த லண்டன்...