×

தென் மண்டல கால்பந்து அண்ணாமலை பல்கலைக்கழகம் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது

சிதம்பரம்: தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கால்பந்து போட்டியில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.பெங்களூர் கிறிஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த தொடரின் (அக்.29 - நவ.1) லீக், நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் அண்ணாமலை பல்கலைக்கழகம் அசத்தலாக விளையாடி பைனலுக்கு தகுதி பெற்றது. லீக் சுற்றின் முதல் போட்டியில் கோழிக்கோடு அணியுடன் 1-1 என டிரா செய்தது. 2வது லீக் போட்டியில் சென்னை பல்கலை. அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், 3வது போட்டியில் மதுரை காமராஜர் பல்கலை. அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

அரையிறுதியில் மனோன்மணி சுந்தரானார் அணியை 7-0 என்ற கோல் கணக்கில் பந்தாடி பைனலுக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் கோழிக்கோடு அணியை 1-0 என வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.இந்த தொடரின் முதல் 4 இடங்களைப் பிடித்த அண்ணாமலை, கோழிக்கோடு, மதுரை காமராஜர், சென்னை பல்கலைக்கழக அணிகள் 2020 பிப்ரவரியில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற உள்ள தேசிய பல்கலை. கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.


Tags : Annamalai University ,South Zone Football , South Zone,Football Annamalai University , won , championship title
× RELATED இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர்...