×

2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது நியூசிலாந்து

வெலிங்டன்: இங்கிலாந்து அணியுடன் நடந்த 2வது டி20 போட்டியில், நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது.வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. கப்தில் 41 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் 42 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கிராண்ட்ஹோம், டெய்லர் தலா 28 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் ஜார்டன் 3, சாம் கரன் 2, சாகிப் முகமது, அடில் ரஷித், கிரிகோரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 155 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. டேவிட் மாலன் 39, கேப்டன் மோர்கன் 32, ஜார்டன் 36, கிரிகோரி 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். நியூசி. பந்துவீச்சில் சான்ட்னர் 3, சவுத்தீ, பெர்குசன், சோதி தலா 2, டேரில் மிட்செல் 1 விக்கெட் வீழ்த்தினர்.சான்ட்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டி20 போட்டி நெல்சனில் நாளை நடைபெறுகிறது.

Tags : New Zealand ,England ,2nd T20 , New Zealand,beat England , 2nd T20
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...