×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஆஷ்லி பார்தி சாம்பியன்

ஷென்ஷென்: சீனாவில் நடைபெற்ற டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்டு இறுதி தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன், 8வது ரேங்க்) நேற்று மோதிய ஆஷ்லி பார்தி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 26 நிமிடத்துக்கு நீடித்தது. 2019 சீசனில் பார்தி வென்ற 4வது சாம்பியன் பட்டம் இது.

மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் ஹங்கேரியின் டிமியா பாபோஸ் - கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்) ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் சூ வெய் சை (சீன தைபே) - பார்போரா ஸ்டிரைகோவா (செக்.) ஜோடியை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


Tags : Finals ,WDA ,Ashley Bharti Champion , WDA Finals, Ashley ,Bharti,Champion
× RELATED இணைய வழியில் இறுதித்தேர்வை குழுவாக...