×

மழையால் ஆட்டம் பாதிப்பு ஆஸ்திரேலியா ஏமாற்றம்

சிட்னி: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளிடையே நடைபெற்ற முதல் டி20 போட்டி, கனமழை காரணமாக முடிவு இல்லாத போட்டியாக அறிவிக்கப்பட்டது.சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீச, பாகிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆஸம் ஆட்டமிழக்காமல் 59 ரன் (38 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். முகமது ரிஸ்வான் 31, ஆசிப் அலி 11 ரன் எடுத்தனர்.

ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க், ரிச்சர்ட்சன் தலா 2, ஏகார் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து டி/எல் விதிப்படி 15 ஓவரில் 119 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன் எடுத்திருந்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் கைவிடப்பட்டது. வார்னர் 2 ரன், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 ரன்னுடன் (16 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, 2வது போட்டி கான்பெராவில் நாளை நடக்கிறது.



Tags : Australia , Australia's,disappointment , rain
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...