×

ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமர் இல்லம் மாறுகிறது

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற மற்றும் முக்கிய கட்டிடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின்படி, பிரதமர் இல்லத்தை ஜனாதிபதி மாளிகைக்கு அருகே இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம், தற்போதுள்ள நிலைமையில் இடவசதி குறைவாக உள்ளது. இதனால் அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரப்பட்டு வருகிறது. இது அது பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால், அதில் பல்வேறு பாதிப்புகளும் உள்ளன. இதனால் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.மேலும், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட்டில் உள்ள ராஜபாதை வரை,  புதிய கட்டிடங்கள்உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது பிரதமர் இல்லம், லோக் கல்யாண் மார்க்கில் உள்ளது. அதை டல்ஹவுசி சாலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே இடம் மாற்றஉள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய இடத்தில் பிரதமரின் அலுவலகமும் இடம் மாற்றப்படும். எனினும், இதுதொடர்பாக ஆலோசனை மட்டுமே நடந்து வருகிறது. இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.இதுதொடர்பாக அனைத்து துறையினருடனும், அரசியல் கட்சியினரிடமும் ஆலோசனை நடத்திய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புறத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.இந்த புதிய கட்டிடங்கள் கட்டுமானம் தொடர்பாக ஆய்வு செய்த, அகமதாபாத்தை சேர்ந்த ஹெச்.சி.பி நிறுவனத்தின் கட்டுமானத்துறை வல்லுனர்கள் மத்திய அரசுக்கு சில பரிந்துரை செய்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:பிரதமர் இல்லத்தை தற்போதுள்ள லோக் கல்யாண் மார்க்கில் இருந்து ஜனாதிபதி மாளிகை அருகே மாற்ற வேண்டும். புதிய நாடாளுமன்ற வளாகத்தை பழைய நாடாளுமன்றம் வளாகம் அருகிலேயே அமைக்கலாம். தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தை இடித்து விடாமல், அதனை இந்திய ஜனநாயகம் தொடர்பான கண்காட்சி வளாகமாக மாற்றலாம். வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள் மீது எந்த வித மாற்றமும் தேவையில்லை. ஆயினும் இறுதி முடிவை பிரதமர் அலுவலகம், மக்களவை சபாநாயகர் போன்றோரிடம் மேற்கொள்ளும் விரிவான ஆலோசனைக்குப்பிறகு அறிவிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.

Tags : House ,President's House , Prime Minister's ,House adjoins ,President's House
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்