×

3 தொழிலாளர்கள் பணி நீக்க வழக்கு நோபல் பரிசு பெற்ற யூனுசுக்கு ஜாமீன்

தாகா: வங்கதேசத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ். இவர் கிராமின்  என்ற பெயரில் வங்கியை தொடங்கி சிறு, குறு கடன்களை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், பல தொழில் முனைவோர்களை உருவாக்கினார். இதனால் யூனுசுக்கு கடந்த 2006ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. இந்நிலையில், கிராமின் வங்கியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 3 தொழிலாளர்கள் முகமது யூனுசுக்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் கடந்த ஜூலையில் வழக்கு தொடர்ந்தனர்.

தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு முயன்றதால், தாங்கள் சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வரும் 7ம் தேதிக்குள் தொழிலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Nobel Laureate Yunus , 3 Nobel,Laureate, Yunus bail,dismissed
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...