×

காவாங்கரை, கன்னடபாளையம் தெருக்களில் மழைநீர் தேக்கம்: தவிக்கும் பொதுமக்கள்

புழல்: புழல் காவாங்கரை, கன்னடபாளையம் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது  வார்டு புழல் காவாங்கரை, கன்னடபாளையம் பகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெரு, ஜீவா தெரு, திருமலை நகர், சக்திவேல் நகர், காஞ்சிஅருள் நகர், தமிழன் நகர் மற்றும்  திருநீலகண்டன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். சாலைகள் சரியாக இல்லாததால் வாகனங்கள் ஓட்டமுடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்கின்றவர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் மோசமான சாலையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் தங்களது வேலை விஷயமாக செல்ல கடும்  சிரமப்படுகின்றனர். மேலும் சாலை சகதியாக உள்ளதால் பைக், சைக்கிள்களில் செல்கின்றவர்கள் வழுக்கிவிழுந்து காயம் அடைகின்றனர். இதுபற்றி 22வது வார்டு அதிகாரிகளிடம்  பலமுறை  புகார் தெரிவித்தும் பிரச்னையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை. இனிமேலாவது பிரச்னையை தீர்க்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Tags : streets ,Kavangarai ,civilians ,Kannadapalai ,Stranded Civilians , Rainwater harvesting on the streets of Kavangarai and Kannadapalai: stranded civilians
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...