×

முல்லைக்குடி கீழத்தெரு சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றி சீரமைப்பு

திருக்காட்டுப்பள்ளி: முல்லைக்குடி கீழத்தெரு சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றி சீரமைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் தீட்சசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட  முல்லைக்குடி கீழத்தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் சரியான வடிகால் இல்லாமல் தண்ணீர்தேங்கி குளம் போல் உள்ளது. மேல்நிலைநீர்தேக்க தொட்டி  உள்ள பகுதியிலும் செல்ல முடியவில்லை. இதனால் தெருவில் நடக்கக்கூட முடியவில்லை. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது  குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே இன்று (3ம் தேதி) தெருவில் நாற்று நடும் போராட்டம் நடத்த இருக்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காந்தி  அறிவித்துள்ளார் என்று நேற்று (2ம் தேதி) தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று பூதலூர் தாசில்தார் சிவகுமார் வழிகாட்டுதலின் பேரில் பூதலூர்  ஊராட்சி ஓன்றிய பணியாளர்கள் மழைநீரை வடிய வைத்து, மண் போட்டு சாலையை சீர்படுத்தினர். செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், உடன் சீர்படுத்திய ஊராட்சி ஒன்றிய  பணியாளர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.



Tags : Removal ,road ,Mullaitivu , Removal of stagnant rain water in Mullaitivu downstream road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...