×

சுற்றுச்சூழல், மாறுபட்ட காலநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இயற்கையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெங்கையாநாயுடு பேச்சு

சென்னை: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தார். சென்னை வந்த குடியரசு துணை தலைவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோரும் வரவேற்றனர். இதனையடுத்து சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; முதலாம் நூற்றாண்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம் கடல்சார் கட்டமைப்பில் நாம் சிறந்து விளங்கியதற்கான சான்று.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா, கடல் ஆராய்ச்சியில் ஒரு போர் நடத்தியதாக குறிப்பிட்ட அவர், வளர்ந்து வரும் மக்கள் தொகையால் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அதிகளவில் கடல் நீரை தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் கூறினார். சுற்றுச்சூழல், மாறுபட்ட காலநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இயற்கையை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தேவையான அறிவியல் ஆராய்ச்சிகளை  மேற்கோள்ள வேண்டும். அயல்நாடுகளுடனான வர்த்தகத்தில் தமிழக மன்னர்கள் சிறப்புடன் விளங்கினர்  என்றும் கூறியுள்ளார்.


Tags : Venkaianayudu , Environment, Nature, Venkaianayudu
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...