×

பாப்பிரெட்டிப்பட்டியில் அடிப்படை வசதியில்லாத சார்பதிவாளர் அலுவலகம்: பொதுமக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் அடிப்படை வசதியின்றி உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகம், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 5  வருடங்களாக புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பட்டா பெயர் மாற்றம், பததிரப்பதிவு என தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், இங்கு வருபவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அலுவலகத்தின் வெளியில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லை. குடிநீர் வசதியும் இல்லை. மேலும், முட்புதர்கள் மண்டி கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே, சார்பதிவாளர் அலுவலகம் அருகே செடிகளை அகற்றி, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Relatives ,Papyretipatti Papyretipatti , Papirettipatti, Dependent Office
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...