×

தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குகிறது: தாய்லாந்தில் தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு

பாங்காக்: முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக தொழில்புரிவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள் என தாய்லாந்தில் தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் 16வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு இன்று நடக்கிறது. நாளை 14வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3வது பிராந்திய பொருளாதார மாநாடு நடக்கிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று பாங்காக் புறப்பட்டு சென்றார். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சாவை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, அவர் அளிக்கும் சிறப்பு விருந்திலும் கலந்து கொள்கிறார். இதனிடையே அந்நாட்டின் தொழிலதிபர்களிடையே உரையாற்றினார். அப்போது முதலீடுகள் செய்வதற்கும் எளிதாக தொழில்புரிவதற்கும் உலகிலேயே மிகவும் சிறந்த இடம் இந்தியா என கூறினார். இந்திய தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டில் நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைத்துள்ளோம். தற்போது இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பாக உணர்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் பாஜக அரசு பொறுப்பேற்றபோது இந்தியா 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்தது என்றும், 5 ஆண்டுகளில் அது 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.


Tags : India ,Thailand ,Start Business ,Modi , Industry, India, PM Modi, Call
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...