×

தனியார் மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

தண்டையார்பேட்டை: அரக்கோணத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி விஜயலட்சுமி (27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை, கடந்த 25ம் தேதி பிரசவத்துக்காக வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு, அறுவை சிகிச்சை மூலம் விஜயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், சில மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

குழந்தையை கண்ணாடி பெட்டியில் வைத்திருந்ததாலும், தனக்கு வயிற்று வலியாலும் மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி, திடீரென மருத்துவமனையின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், படுகாயமடைந்த விஜயலட்சுமியை மீட்டு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்து கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Teenager ,suicide ,hospital floor Teenager , Private hospital, adolescent suicide
× RELATED மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி