×

தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போட்டதும் வாயில் நுரைதள்ளி பெண் சாவு

* டாக்டர் மீது போலீசில் புகார்
* வியாசர்பாடியில் பரபரப்பு

பெரம்பூர்: காய்ச்சலுக்கு ஊசி போட்டதும் வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் வியாசர்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவை சேர்ந்தவர் சுனில்குமார் (48). இவர், வியாசர்பாடி சஞ்சய் நகர் 2வது தெருவில் தங்கி, அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜ்யு (45). இவர்களுக்கு 14 வயதில் அமிர்தா என்ற மகள் உள்ளார். கடந்த 2 நாட்களாக விஜ்யுக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால், அருகில் உள்ள கிளினிக்கிற்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், விஜ்யுக்கு ஊசி போட்டதாக தெரிகிறது. இதன்பிறகு வீட்டுக்கு வந்ததும் விஜ்யுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளி விழுந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஜ்யு இறந்ததாக கூறினர்.
இதுகுறித்து எம்கேபி.நகர் போலீசில் சுனில்குமார் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து பெண்ணுக்கு ஊசி போட்ட டாக்டர் சோமசுந்தரத்திடம் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் விஜ்யு எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : hospital ,Fever , Private Hospital, Needle, Girl Death
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி