×

தொழிலாளி அடித்து கொலை

பல்லாவரம்: பல்லாவரம் வெட்டர்லைன் ராணுவ மைதானம் அருகே, நேற்று முன்தினம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொடுங்கையூரை சேர்ந்த தொழிலாளி ஆனந்தன் (45) என்பதும், இவர் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 4 மாதங்களாக தனது மனைவியை விட்டு பிரிந்து, ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இவரை அடித்துக் கொன்றது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Worker, beaten and killed
× RELATED பளுகல் அருகே லாரிக்கு தீ வைப்பு தொழிலாளி கைது