×

இலங்கை கடற்படை சிறைபிடித்த 4 மீனவர்கள் விடுவிப்பு

வேதாரண்யம்:  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமு (40). இவரது பைபர் படகில் கடந்த 2ம் தேதி  ராமு, கஜேந்திரன், ராஜேந்திரன்,  ஜெயராமன் ஆகிய நான்கு பேரும் கோடியக்கரையில் மீன்பிடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்ததாக இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையொட்டி நேற்று இலங்கையில் 4 பேரும் விடுவிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். காலையில் 4 மீனவர்களும் சொந்த ஊருக்கு வந்துசேர்ந்தனர்.

Tags : Sri Lanka Navy ,fishermen , Sri Lanka Navy releases fishermen
× RELATED மீனவர்கள் போராட்டம்