×

ஊட்டி கல்லூரி மாணவர்கள் மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து

ஊட்டி: ஊட்டியில் கல்லூரி மாணவர்கள் நடந்த மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. ஊட்டி  அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் முன்னாள் மாணவர்கள் இரு  பிரிவினரிடையே நேற்று இரவு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பிரச்னை  ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு  ஏற்பட்டது.  அப்போது சில மாணவர்கள் கத்தியை காட்டி எதிர் கோஷ்டியை  மிரட்டியுள்ளனர். இதை தடுக்க முயன்ற முன்னாள் மாணவருக்கு  வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. இது குறித்து ஊட்டி போலீசார் 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

Tags : college students ,Ooty ,Another ,clash , Ooty, college students, conflict
× RELATED இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்:...