×

என்ஐஏ விசாரணையில் பரபரப்பு தகவல்: தீவிரவாதிகளுடன் வீடியோ காலில் திருச்சி வாலிபர் பேசியது அம்பலம்

மணப்பாறை: திருச்சியை சேர்ந்த வாலிபர், லேப்டாப் மூலம் தீவிரவாதிகளுடன் வீடியோ கால் பேசிய தகவல் அம்பலமாகி உள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர்  பலியானார்கள். இந்த செயலில் ஈடுபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு தமிழகத்தை   சேர்ந்த சிலரிடம், தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக கோவையில் 6 பேரை கைது செய்து சிறைகளில் அடைத்தனர். இதன்தொடர்ச்சியாக நாகை, திருச்சி, கோவை, தூத்துக்குடி உள்பட 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 31ம் தேதி சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரை சேர்ந்தவர் சாகுல் அமீது (29). தனியார் பால் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைபார்த்து வருகிறார்.

இவரது வீட்டில் கடந்த 31ம்தேதி அதிகாலை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவர் வீட்டில் இல்லை. பெற்றோர்தான் இருந்தனர். அவரது வீட்டில் இருந்து லேப்டாப், டைரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனிடையே, கோவையில் ஏற்கனவே ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர், தீவிரவாதிகளுடன் வீடியோ காலில் பேசியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இப்போது, சாகுல் அமீதுவும், லேப்டாப் மூலம் தீவிரவாதிகளுடன் பேசியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதுபற்றி டிஎஸ்பி விஜயகுமாரிடம் கேட்டபோது, ‘சாகுல் அமீதுவின் லேப்டாப்பை ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் நிலவரம் தெரியவரும்’ என்றார்.

4 பேரிடம் விசாரணை: நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முகமது அஜ்மல் உள்ளிட்ட 4 பேரை நாகை டவுன் போலீஸ் ஸ்டேசன் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நேற்றும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.. விசாரணை நீடிப்பதால்  சிலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Tags : extremists ,Trichy ,youth talk , NIA investigation, extremist
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...